செல்வராகவன் – தனுஷ்
மகேஷ் பாபு
27 ஜூலை 2024
2003 என்று நினைக்கிறேன்.. சென்னை புறநகர் ரயிலில் வேலைக்கு செல்வது வழக்கம். எதிரில் இருப்பவர் "தினதந்தி" அலசி விட்டு அக்குளில் சொருகும் நேரம், "பேப்பர் ப்ளீஸ்.." என்று கேட்டு வாங்கி (அப்பொழுது அவ்வளவு கூச்சம் எல்லாம் இல்லை) நேராக சினிமா விளம்பரம் பக்கம் தான் கண்கள் பாயும் மேயும்... ஒரு மூலையில் "காதல் கொண்டேன்" விளம்பரம், நாளை முதல் ரிசர்வ் செய்ய படுகிறது.. என்ற அடை மொழியுடன்... ஒரு ஒட்டு தாடி அப்பாவி மூஞ்சியுடன் ஹீரோ கயில் ரோஸ் வைத்து கொண்டு பார்க் பெஞ்சில் இருப்பது போல் போஸ்டர்.. நான் இதற்கு முன்னர் "துள்ளுவதோ இளமை" பார்த்து இருந்ததால், அந்த படத்து இயக்குநரின் மேல் ஒரு ஆர்வம்.. அப்பொழுது 21 வயது வேறு.. இந்த புது படம் எப்படியும் ஒரு கமிங் ஆப் ஏஜ் ஸ்டோரி, இல்லை பாய் லவிங் ஆண்டி மாதிரி எதாகூட ஸ்டோரி யாக தான் இருக்கும் என்று எனக்குள் ஒரு கணிப்பு.. நல்ல வேளை அப்பொழுது டிரைலர் கெடையாது.. புது பட புரமோஷன் லாம் கெடையாது.. எனக்கு தெரிந்த சோஷல் மீடியா சோர்ஸ், தினதந்தி, குமுதம், ஆனந்த விகடன் தான்..
ஆவடி யில் வீடு என்பதால், எந்த புது படம் என்றாலும் எனக்கு இருந்த ஒரே நியர்பை ஆப்ஷன், அம்பத்தூர் "ராக்கி" தியேட்டர் தான்.. ரிலீஸ் ஆன முதல் நாள் என்றாலும் ஒரு 1 மணி நேரம் முன்னால் சென்றால் எப்படியும் டிக்கட் கிடைக்கும்... தியேட்டர் க்கு வெளியில் "கோவில் பட்டி வீரலட்சுமி" படத்திருக்கு சிம்ரன் க்கு பெரிய கட் அவுட் வைக்க பட்டு இருந்தது.. என்னமோ தெரிய வில்லை, தியேட்டர் அன்றைக்கு ஹவுஸ் ஃபுல்.. படம் ஆரம்பித்து ஒரு 5-10 நிமிடங்கள் இருக்கும்... ஒரு பாட்டு வந்தது.. "பதினெட்டு வயதில்.. பார்ப்பவை எல்லாம்.." எனக்கு முன்னால் ரோ வில் இருந்து ஒரு சில பேர் எழுந்து சிகரெட் பிடிக்க வெளியில் போனார்கள்.. "போச்சா" என்று எனக்குள் நினைத்து கொண்டேன்…
படத்தில் ஒரு கிளாஸ் ரூம் சீன் வருகிறது.. புரொபஸர் சீரியஸ் ஆக போர்டு இல் மேத்ஸ் ப்ராப்லம் எழுதி கொண்டே ஸ்டூடென்ட்ஸ் இடம் ஒவ்வுருவராக கேள்வி கேட்பார்.. ஒருத்தனுக்கும் தெரியாது... கடைசி பெஞ்சில் தனுஷ் மொத்தமாக தூங்கி விட்டு இருப்பார்.. ஆத்திரத்தில் கையில் இருந்த டஸ்டர் ஐ வீசி எறிவார்.. "ஹவ் டேர் யூ ஸ்லீப் இன் மை கிளாஸ், பாரு.. அது ஒரு பிராப்ளம், ஹேவ் யூ எவர் சீன் தட் பிஃபோர்? போ போயி சால்வ் பண்ணு, இல்ல பக்கத்துல போயி ஒரு தொடப்ப கட்ட மாதிரியாச்சும் நில்லு" என்று சொல்லி விட்டு திரும்பி "ஸ்டூடென்ட்ஸ், ஐ'எம் ஹைலி டிஸ்அப்பாய்ன்டெட்.. இந்த ப்ராப்லம் எக்ஸ்ப்லெய்ன் பண்றதுக்கு நான் எத்தனே புக்ஸ் ரெபர் பண்ணேன் தெரியுமா.. இட் டுக் 3 டேஸ் ஃபார் மீ டு ப்ரிபேர்.." என்று சொல்லி கொண்டே வருவார்.. அப்பொழுது ஒரு பிஜிஎம் வருகிறது, முதுகு தண்டில் யாரோ கரண்ட் பாய்ச்சியது போல... புரொபசர் முதுகுக்கு பின்னால் அவுட் ஆஃப் போகஸ் இல், தனுஷ் குனிந்து போர்டு இல் ப்ராப்லம் சால்வ் பண்ணி கொண்டு இருப்பார்.. அமைதியாக இருந்த ஒட்டு மொத்த தியேட்டர் உம் விசில் சத்தத்தில் விழித்து கொண்டது.. நீண்ட நேரம் அடித்து ஓயும் நேரத்தில், தனுஷ் சாக் பீஸ் ஐ குடுத்து விட்டு திரும்ப அதே போல் படுத்து தூங்கி விடுவார்... மறுபடியும் விசில் சத்தம், கரகோஷம்... ஒரு மாஸ் சீன் இப்படி கூட எழுத முடியும் என்று செல்வர்கவன் நிகழ்த்தி காட்டிய அதிசயம் அது!
அதற்கு பிறகு மொத்தப் படமும் 5த் கியர் இல் டிராவல் செய்கிறது.. தனுஷ் சோனியா அகர்வால் டெஸ்க் இல் உட்கார்ந்து கொண்டு பேசுவது.. கான்டீன் இல் வேக வேகமா நூடுல்ஸ் சாப்பிடும் காட்சி, பேஸ்கட்பால் கோர்ட் ஃபைட் சீன், நாகேஷ்'எஸ் கம் பேக் என்று இன்டர்வல் வரை, தியேட்டர் இல் பேச்சு மூச்சு இல்லை, எவரும் இருக்கையை விட்டு நகரவில்லை.. பொதுவாக படங்களில் ஒரு ஹீரோ இன்ட்ரோ சாங், சண்டை காட்சி யின் போது மட்டும் தான் மொத்த தியேட்டர் உம் ஆர்பரித்து பார்த்து இருக்கிறேன்.. அதே ஆரவாரம் இந்த கேன்டீன் சீன் முடியும் வரை இருந்தது... யுவனின் மியூசிக் அதை இன்னும் ஒரு படி தூக்கி நிறுத்தியது என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக அந்த க்ளைமாக்ஸ்! அதில் தனுஷ் ஆடும் அந்த நடனம்! இன்று அவர் பல படங்களில் நடித்து பெரும் புகழும் வாங்கி இருக்கலாம்.. என்னை பொறுத்த வரை, தனுஷ் என்ற ஒரு சிறந்த நடிகன் உருவான இடம் அது தான். காதல் கொண்டேன், இன்று வரை நான் தியேட்டர் இல் சென்று பார்த்த சிறந்த படங்களில் ஒன்று.
பின்குறிப்பு: நேற்று நண்பர் ஒருவருடன் சென்று ராயன் படம் பார்த்தேன். தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன் நடித்து இருந்தார்.
அருமையான தொடக்கம். இது முதல் தொடக்கம் அல்ல, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடக்கம். வேட்டை படத்தில் வில்லன் டயலாக் ஒன்று நினைவிற்கு வருகிறது: "வயசானாலும் மனசும் உடம்பும் ஒரே மாறி இருக்குதானு பாப்போம், இப்போ வீசுடா கத்திய...!"
ReplyDeleteஹாஹாஹா... நன்றி! வயசானது மட்டும் தான் உண்மை :)
Delete