Posts

செல்வராகவன் – தனுஷ்

மகேஷ் பாபு 27 ஜூலை 2024 2003 என்று நினைக்கிறேன்.. சென்னை புறநகர் ரயிலில் வேலைக்கு செல்வது வழக்கம். எதிரில் இருப்பவர் "தினதந்தி" அலசி விட்டு அக்குளில் சொருகும் நேரம், "பேப்பர் ப்ளீஸ்.." என்று கேட்டு வாங்கி (அப்பொழுது அவ்வளவு கூச்சம் எல்லாம் இல்லை) நேராக சினிமா விளம்பரம் பக்கம் தான் கண்கள் பாயும் மேயும்... ஒரு மூலையில் "காதல் கொண்டேன்" விளம்பரம், நாளை முதல் ரிசர்வ் செய்ய படுகிறது.. என்ற அடை மொழியுடன்... ஒரு ஒட்டு தாடி அப்பாவி மூஞ்சியுடன் ஹீரோ கயில் ரோஸ் வைத்து கொண்டு பார்க் பெஞ்சில் இருப்பது போல் போஸ்டர்.. நான் இதற்கு முன்னர் "துள்ளுவதோ இளமை" பார்த்து இருந்ததால், அந்த படத்து இயக்குநரின் மேல் ஒரு ஆர்வம்.. அப்பொழுது 21 வயது வேறு.. இந்த புது படம் எப்படியும் ஒரு கமிங் ஆப் ஏஜ் ஸ்டோரி, இல்லை பாய் லவிங் ஆண்டி மாதிரி எதாகூட ஸ்டோரி யாக தான் இருக்கும் என்று எனக்குள் ஒரு கணிப்பு.. நல்ல வேளை அப்பொழுது டிரைலர் கெடையாது.. புது பட புரமோஷன் லாம் கெடையாது.. எனக்கு தெரிந்த சோஷல் மீடியா சோர்ஸ், தினதந்தி, குமுதம், ஆனந்த விகடன் தான்..  ஆவடி யில் வீடு என்பதால், எந்த புத...